Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்

பேஸ்புக் | facebook

Kavi
Facebook



அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க 
ஆரம்பமாகிறது 
இணையதள  உறவுகள் !

நிழற்படங்களின் 
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென 
நினைக்கின்ற மனது இது!

விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள் 
இங்கு ஏராளம்!

உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!

அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும் 
அகம் மகிழ்வு கொள்ளும்.

உண்மை அன்புகள் 
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!

மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும் 
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!

உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை 
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!

முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!

உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா 
வன்முறை உண்டு பண்ணா 
நல்ல சிந்தனை 
நமக்கு வேண்டும்!

சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!




புகை

pakai
Pookai


வளரும் சந்ததியினரை
வழுக்கிய சறுக்கள்!
வலிமையிழந்து நீ 
வலுவோடு அவன்!

விரல்களுக்கு இடையில் 
உயிரைத் தின்னும்
விளையாட்டுப் பொருளாக
கலியுக நாகரீகம் இவன்!

தொடர்ந்து வருகிறான்
தூக்கி நீ எறிந்த போதும்!
உதடுகளோடு மட்டுமல்ல 
உயிரோடு உறவாடுகிறான்!

வெள்ளைப் புகையில் 
கருப்பாய் ஒரு விதவை
சிவந்த நுரையீரலில்
சீராக மாற்றம் செய்தான்!

புகையோடு உறவாடி
புதியதாய் ஓர் உறவு 
நுரையீரலை சந்தித்து  
புற்று நோய் வளர்த்தான்!

வளர்ந்து விட்ட அவன் 
எட்டி உதைத்தான்
அந்தோ சாய்ந்தான் 
கல்லறைக் குழியில்!




பொங்கல் கவிதை | pongal kavithaigal

Pongal
pongal kavithaigal


விடியற்காலையில் விடியலாய்
கழனி நோக்கி நீ சென்றாய்!

கால் பதித்த கழனியில்
உன் வெள்ளை உள்ளம் கண்டு 
ஒட்டிக் கொண்ட சேறுகள்! 

வயல் வரப்பு பாதைகளில்
உன் பாதச் சுவடுகள் 
தினம் தினம் அரங்கேற்றம்!

சுட்டெரிக்கும் வெயிலில் 
காந்தி உடையின் பாதியோடு
வியர்வைகள் நீ சிந்துவாய்!

நீயும் நெற்கதிரும் 
உரையாடுவீர்கள் தினம் தினம்.
உனக்கு நீ எனக்கு நான்!

உழவனான உன் உழைப்புக்கு
வளர்ந்து விட்ட நெற்கதிர்
தலை சாய்த்து மரியாதை!

தமிழனாய் மட்டும் அல்ல
தரணியில் நல்லதொரு 
உழவனாகவும் நீ!

தமிழனும் உழவனும் 
தரணியில் வாழ்வாங்கு வாழ 
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்!

பொங்கலோ பொங்கல்!

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!








இரவுகளின் விழி | iravukalin vili


இரவுகளுக்கு பார்வை கொடுத்த
விஞ்ஞானத்தின் விழிகள்
மின் விளக்குகள்

நம்பிக்கையூன்றி நட

nambikkai
Nambikkai

விழியினாலும் வலியினாலும் 
விழுந்து விட்டாலும் 
வீழ்ந்து விடாதே!

விதியை தூரத்தி
வீதியில் நிறுத்தும் 
வல்லமை கொண்டவன் நீ!

வீறு கொண்டு நீ எழுந்தால் 
இன்றைய முயற்சி 
நாளைய வெற்றியென
வீர நடை நீ போடுவாய்!

தேடுகின்ற வாய்ப்புகள் 
தூரத்து கானல் நீர்கள்!
உருவாக்கும் வாய்ப்புகள் 
உன்னத அமிர்தங்கள்!

உன்னுள் இருக்கும்
ஒப்பற்ற  திறமையை
நீ கண்டு கொண்டால்
முயற்சியின் உதாரணம் நீயென 
உலகம் உன்னை அறியும்!

உலகை விட்டுச் செல்லும் முன்
சொல்லி விட்டுச் செல்ல வேண்டாம்!
செய்து விட்டுச் சொல்லுவோம்!
முயற்சிக்கு வேண்டும் வேகம் 
வெற்றிக்கு வேண்டும் விவேகம் 

தெரிந்தோ தெரியாமலோ 
விழுந்து விடுவது 
எழுந்து நடக்கத்தான்!

நம்பிக்கையூன்றி நட!




ஆண்பால் கணணி - done


கருவிழி கண்ட கணணி திரை 
உன் மேல் காதல் கொள்ள 
உன் விரல் தொட்ட மயக்கத்தில் 
விசைப் பலகையும் மோகம் கொள்ள 
அஃறிணை கணணி 
ஆண்பால் என்று உணர்ந்தேன்!


இயற்கையின் புதல்வனே - நம்மாழ்வார்

nammalvaar

nammaalvaar

இயற்கையின் வேதனை 
இயல்பாக இல்லாமல் 
செயற்கையினால் வந்த 
செயற்கை என நீ அறிந்து
செயற்கையை கருவறுத்த
இயற்கையின் புதல்வனே !

இயற்கையை சிரிக்க வைத்து 
சிரிப்பின் சிதறல்களாய் - ஆங்காங்கே
இயற்கை விவசாயம் 
நலம் பெறச் செய்த நல்லவரே!

இயற்கை உரங்களின்
தவறான இலக்கணமாம்
செயற்கை உரங்களை 
வீழ்த்தச் செய்தவரே!

இயற்கையோடு இயற்கையாய் 
இரண்டற நீ கலந்ததால் 
உன் இயற்கை ஆர்வம் 
இறைவனும் அறிந்து
அழைத்து விட்டான் உன்னை!

நீ இல்லா இயற்கை 
இனி இடர் கண்டு விட
எங்கு சென்று தேடுவோம் உன்னை!

உங்களது ஆன்மா
சாந்தி அடைய 
இறைவனை வேண்டுகிறேன்!

https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878






new year kavithai in tamil | புது வருட கவிதை





கிழித்தெறியும் நாட்காட்டியில்
கடைசி நேர உயிராய்
வருடத்தின் இறுதி நாள்!

இறுதி நாளின் 
தொப்புள் கொடி உறவாய்
உலகில் நாளை உதயம்!
புது வருடம் 2016!

புது வருட வாழ்த்துக்கள்!


மற்றுமொரு புத்தாண்டு கவிதை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://nellaibaskar.blogspot.com/2014/12/blog-post_26.html




சேமிப்பு ஹைக்கூ


இழந்து விட்ட பேனா மையில் 
இப்படியும் ஓர் சேமிப்பு!
காகிதம் கண்ட கவிதைகள்.

எனக்கான இதயங்கள்



துன்பங்கள் அவலமாய் கோர்த்து
துயர் கொண்ட மாலையாய்
வாழ்கையில் தினம்  விழ
விதியால் வந்த துன்பம் தனை
வீதியில் எரியச் செய்த நட்பு
எனக்கான இதயம் என் நண்பன்!

விழிமூடி இரவுகள் இருள் காட்ட
விழிதிறந்து பகலையும் காட்ட
இரவும் பகலும் ஓய்வு எடுக்காது
சுகம் காணும் கனவில் உலா வந்து
தினம் ஒரு கவிதைப் பரிசு
தந்து செல்லும் என் காதல்.
எனக்கான இதயம் என் காதலி!

அன்பு எனும் அளவுகோலின்
அகரமும் சிகரமுமா யிருந்து
உலகத்திலும் உறவுகளிலும்
உன்னதமும் புனிதமுமா யிருந்து
கற்பனை தீண்டா கவிதை யாய்
சொந்தங்களில் முதன்மையாய்
மெய்யான தத்துவம் என் அம்மா!
எனக்கான இதயம் என் அம்மா!




christmas poems | christmas in tamil | கிறிஸ்துமஸ் கவிதை

christmas
christmas in tamil

கருணையின் சிகரமாய் 
கடவுளாய் பிறந்தவன்
கடவுளின் ஒளி!

வருந்தும் உள்ளங்களின் 
வாழ்க்கை வழி காட்டியாய்
வாழ்வு கொடுத்த ஒளி!

வாயில்தோறும் மின்னொளியில்
ஒளிர்கின்ற நட்சத்திரத்தில்
வீடு தேடி வந்த ஒளி!

சுக்குநாறிப் புல்லில்
வளர்ந்து விட்ட குடிலில்
அவதரித்த புனித ஒளி!

கேட்டதும் கொடுத்து 
தட்டியதும் திறந்து 
தேடியே கண்ட ஒளி!

மானுடர்களை இரட்சிக்க 
மாட்டு தொழுவத்திலே
புனிதனாய் பிறந்த ஒளி!

ஒளி தந்த வெளிச்சத்திலே
துயர் கொண்ட இருள் நீங்கி
வாழ்வை செழுமையாக்கிய  ஒளி!

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!






விரலின் மகுடம்


தாமரை இதழின் நகலாய்
நான் கண்ட உன் நகங்கள்!

மின்னொளி பட்டு
ஒளிவீசும் வைரமாய்
கண்சிமிட்டும் உன் நகங்கள்!

வளர்பிறை உண்டு
தேய்பிறை இல்லை
ஆதலால் வீதிக்கும்
செல்லவில்லை!

உதடுகளில் உறவாடி
எச்சிலில் விளையாட
வாய்ப்பு இங்கு இல்லை
நகம் கடிக்க மாட்டாயே?

உன் விரல் பிடித்து
உலா வர ஆசை படுவேன்!
உண்மைதான்!

நகம் தொடவும்
மறவ மாட்டேன்!
அதுவும் உண்மைதான்!

ரோஜா மலர் பறிக்க
உன் விரல் ஏங்கும்!
ரோஜா என்னவோ
உன் நகம் தொட ஏங்கும்!

பழமொழி உருமாறும்
புது மொழி உருவாகும்.
இனி உன் நகம் கண்டு
கவிஞனும் சொல்லுவான்!

அகத்தின் அழகு
முகத்தில் மட்டுமல்ல!
நகத்திலும் என்று!




அன்புள்ள அம்மாவுக்கு



வெள்ளைக் காகிதத்தில் 
அம்மா என்று எழுதிட 
அங்கே கவிதை ஒன்று 
பிரசவ வலி கண்டுவிட 
கற்பனைகள் வலுவிழக்கும் 
கவிதை அது உயிர்ப் பெறும்! 

உயிர்ப் பெற்ற அந்த 
வெள்ளைக் காகிதத்தில் 
நான் கண்ட கவிதைகள் இதோ!

சுமைகளை சுகமாய் 
மொழி பெயர்க்கும் அகராதி!
கடவுள் அளித்த அகராதி
கடவுளாய் என் அம்மா!

மழலையாய் தவழ்ந்தேன்
விரல்பிடித்து  நடை பழகினேன்
அம்மா எனும் கவிதையை 
அடிக்கடி தவறுதல் இல்லாமல் 
ஒப்புவித்தேன்!

இரு கை விரித்து 
நீ என்னை அழைக்க 
தவழ்ந்து நானும் வந்தேன்.

நான் தவழ்ந்து வந்ததில் 
மின்னல் வேகம் இல்லை.
அதனால் நானும் வஞ்சித்தேன்
கடவுளை தினம் தினம்!
நடை பழகும் நாள் வரை!

கன்னத்தைக் கிள்ளி
நீ சிரிக்க 
கை கால் அசைத்து 
களிப்பை வெளிப்படுத்தினேன்!
கடவுளை இங்கும் 
வஞ்சித்தேன்!

உணவு ஊட்டும் வேளையில் 
உதடுகளால் வண்டி ஒட்டி 
உலகச் சாதனை படைத்தேன்!

நெஞ்சத்தில் வஞ்சம் இல்லை
சிந்தனையில் சுயநலம் இல்லை
இன்றுவரை சொல்லவில்லை 
நான் கேட்டு எதுவும் 
இல்லை என்று!

சீரும் சிறப்புமாய் 
வளர்ந்து வந்தேன்!
இரவுகள் வந்தாலும் 
விழி மூடாமல் 
தவம் செய்து 
நீ தொட்டில் ஆட்டியதால்!

அம்மா!
உன் புகழ் பெருமை 
நான் அறிந்ததினால் 
தெய்வம் இல்லை என்று 
பொய்யுரைக்கும் நாத்திகனிடம்  
நினைவுபடுத்தி விடுகிறேன்
அவனது அம்மாவை!




கவிதைக்கு விடுமுறை


குளிருட்டப்பட்ட அலுவலகத்தில் 
அனல் காற்று வீச 
அறிந்து கொண்டேன்!
அலுவலகத்திற்கு நீ விடுப்பு என்று.

இன்று கவிதைக்கு விடுமுறை!

காதலில் விழுந்தேன் | Kaathalil vilunthen done

Kaathal
Kaathalil vilunthen

காட்சி கண்ட விழிகள் 
கவிதை சொல்லும் !
கவிஞனாய் நீ இல்லாவிட்டாலும்!

மௌனம் தாங்கும் பூக்கள் 
மெல்லிசை பாடும்!
மெட்டுக்கள் இல்லா பொழுதும்!

மலராத ரோஜா மொட்டும் 
மலர்ந்து விடும்!
மலர்வது நாளையென அறிந்தும்!

தவமிருக்கும் சாலையோர மரங்களும் 
தவழ்ந்து உன்னைத்தொடும்!
தவழ முடியாதென்று தெரிந்தும்!

தேவதை அவள் கடந்து செல்ல 
தேகங்கள் மெய் சிலிர்க்க 
நான் மட்டும் என்ன விதிவிலக்கு?

காதலில் விழுந்தேன்!





அம்மா அளித்த வரம் | Amma alitha varam

Mother
Amma Alitha Varam


அம்மா என்று எழுதியவுடன்
நானும் மாறி விட்டேன்.
தலை சிறந்த கவிஞனாய்!

கவிதைத் தேடல் | Searching Poetry

thedal
Kavithai Thedal


என் கண்ணா!
நீ என்னைத் தேடி வர 
விழியோர மையை 
கைகுட்டையில் 
ஒழித்து வைக்கிறேன்!
கண்களால் பேச மறந்து 
கவிதை எழுதி விடுவாயோ என்று!

விழிகளின் சிந்தனை | Kan sinthanai

kiraamam
Kiramthi kathiravan


கருவிழிகள் நோக்கும் தூரம் 
கட்டிடங்களாய் தெரிய 
கதிரவனின் உதயனும் 
கதிரவனின் அஸ்தமனமும்
கட்டிடத்தின் பின்பு!

இவன் 
கிராமத்து கதிரவன் அல்ல போலும்!

நேர்மையாய் வாழ்ந்த நாட்கள் | Nermaiyaai vaalntha naatkal

Honest
Honesty

சில மாதம்
கை கால் அசைத்து 
நேர்மையாகவும் 
நிம்மதியாகவும் 
நானும் இருந்தேன்

யோகாவும் தியானமும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

வழிபட்ட கடவுளும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

இமை மூடிய கருவிழியின் 

கனவும் தரவில்லை 
அந்த நிம்மதியை!

சம்பாதித்த காசு பணம் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

மண்ணும் பொன்னும் 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

நட்பும் காதலும் கூட 

தரவில்லை 
அந்த நிம்மதியை!

இருந்தாலும் தந்து விட்டது 
அந்த இருள் கொண்ட 
கருவறை!




பிறந்த நாள் வாழ்த்துக்கள் | Pirantha naal vaalthukkal

piranth naal
Pirantha Naal vaalthu kavithai


சிறுவயது பெரிய கனவுகள் 
சீராக செம்மையாக வளர வேண்டும்!

வந்து விடும் சோதனைகள் 
வாழ்த்து சொல்லும் சாதனையாக வேண்டும்!

இதழ்கள் சிரித்து வாழ 
இதயம் இனிமை காண வேண்டும்!

அகவை ஒன்று கூட 
அளவற்ற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!

விதியையும் வீதியில் நிறுத்துபவனாக 
வீரநடை நீ போட வேண்டும்!

உதிர்த்துவிட்ட உன் சிரிப்பில் 
உதிராத சொந்தமாக நான் வேண்டும்!

பிறை கண்ட நிலா நீ 
பிரியாத வளர்பிறை உனக்கு வேண்டும்!

நல்வாழ்வு நீ வாழ்ந்து 
நலம் நாளும் பெற வேண்டும்!

கவிதை கண்ட வரிகள் 
கற்பனை அல்லாத மெய்யாக மாற 
கடவுளை வேண்டுகிறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/10/blog-post_19.html






குழந்தைகள் தினம் | Childrens Day

Thinam
Kulanthaikal Dinam


புழுதி பறக்கும் வீதியில் 
புயல் வேக ஓட்டம் தினமும்!

சிரிப்பின் சிதறல்கள் 
சிந்தாமல் இல்லை தினமும்!

செவிச்செல்வம் தேடி 
சென்ற நடைபயணம்  தினமும்!

புத்தகப் பையின் சுமைகள் 
புதுவித சுகமாய் தினமும்!

காகித பணம் காணாமல் 
காலணா கிடைத்தது தினமும்!

குளம் கிணறு என்று 
குளித்த நாட்கள் தினமும்!

விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம் 
வீதியில் காந்தங்களோடு தினமும்!

மிதிவண்டியில் அதிவேக பயணம் 
மிதிக்காமல் இல்லை தினமும்!

அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல

அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?






நீ தேடிய நிம்ம்தி | Nee thediya nimmathi

Kavithai
Tharkolai Suicide

சமீபத்திய ஒரு தற்கொலையை மையமாக வைத்து இந்த கவிதை எழுதி உள்ளேன். இதில் சொல்ல வருவது என்னவென்றால், தற்கொலை செய்தவரை கிண்டல் செய்ய வேண்டாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் நிம்மதி தேடி இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.


விண்ணைத் தொடும்
விளிம்பில் இருந்து
புவி நோக்கி நீ குதித்து
விண் நோக்கி நீ சென்றாய்!

மன வேதனைகள்
உன்னை தூரத்த
தனிமையும் அதற்கு
தோள் சேர்த்து
கை கோர்க்க
காலன் அவன்
கணித்து விட்டான்!

உடல் விட்ட உயிரை
வழிந்தோடும் குருதி சொல்ல
படிந்து விட்ட குருதி
பல பேருக்கு
காட்சி பொருளாய் தெரிய
படித்தவன் எவனுக்கும்
புரியவில்லை நீ பட்ட துயரம்!

கட்டிடத்தின் உயரத்தை
கருவிழி கொண்டு அளந்தவன்
உன் உள்மன துயரத்தை
அளக்க வில்லை!

மிஞ்சியது என்னவோ
உன் குடும்ப வேதனையும்
படித்தவனின் கிண்டலும்தான்!

அகல் விளக்கு ஏற்றி அழுதது
உன் அன்னை மட்டும் அல்ல
நானும் தான்!

உன் ஆன்மா நிம்மதி கொள்ள
நிரந்தரமான சாந்தி அடைய
சொர்க்கம் சென்று விட
இறைவனை வேண்டுகிறேன்!

இறந்த பிறகாவது கிடைக்கவிட்டும்
நீ தேடிய நிம்ம்தி!






வெப்பம் மழை வரும் அறிகுறி | veppam malai varum arikuri

veppam
Malai varum arikuri

தினம் பல கனவுகள்
என் கவிதையில் வருகுதே
கனவுகள் பலிக்குதே
இது என்ன மெய்யா பொய்யா?

பூக்களின் மனம் அது 
உன் இதழ்களில் தெரியுதே
நினைவுகள் தொலையுதே
நினைவினில் நீயா நானா?

கை கோர்த்து நடக்கும் போது 
உற்சாகம் கொள்ளும் விரல்கள் 
இதயத் துடிப்பில் வேகம் வேகம் 
கூடி கூடித் தொலைந்து போகிறது

கற்பனை தவறும் போது 
தடுமாறும் கவிதையாவும் 
உன் நினைவைத்தேடி 
நீந்தி நீந்திச் செல்கிறதே

பருவம் சொன்ன காதல் அது ஒ ஒ ஒ 
பலித்தே போன கனவும் அது ஒ ஒ 
கனவினில் ஒரு இதழ் முத்தம் ஒ ஒ ஒ 
கலையாத கனவு அது ஒ ஒ ஒ 
உன் வெள்ளிக் கொலுசின் ஸ்வரம் தேடி நானும் வந்தேனே
அது எட்டாவது ஸ்வரமடி

அவள் சிரிப்பின் சிதறல்கள் ஒ ஒ ஒ 
அது என் கவியின் வரிகள்  ஒ ஒ ஒ
நான் கேட்டது உதட்டோர ஈரங்கள்   ஒ ஒ ஒ 
அட கன்னத்தில் பதித்தது யாரது ஒ ஒ ஒ 
பெண்மைக்குள் இன்னொரு பெண்மை கவி 
அது கருவிழி கவிதையடா!





இன்றைய தமிழ் | Today Tamil

tamil
Indraiya Tamil

வளர்த்து விட்ட தமிழை 
உள் நாவு வெளி கொணர 
ஆங்கிலம் பேசும் நுனி  நாவு 
தமிழுக்குத் தடை போட 
இங்கே அவமானம் 
தமிழுக்கு சமர்ப்பணம்!

தமிழில் சினிமா பெயர்
தமிழில் படித்தால் வேலை 
தமிழை வளர்க்க 
தமிழ் நாட்டுச் சலுகை!

கற்காலம் கண்ட தமிழ் 
முதுமை கண்ட கிழவியாய்
முடங்கிப் போகிறது  
கலாச்சார மொழியினால்!

தாய்மை அடைய நினைத்தவள் 
கருச்சிதைவை அடைந்தது போல
துடித்துப் போகிறேன்
தரணியை ஆண்ட தமிழ் 
பொது இடங்களில் 
தலை  கவிழும் போது!

புது முகம் கண்ட
இரு தமிழ் முகம்
அறிமுகம் என்னவோ
ஆங்கிலத்தில்தான்!

தமிழன் என்று சொல்ல
தலை நிமிர்ந்து நிற்க 
தமிழனால் முடியவில்லை
போலி வாழ்க்கை
உண்மையாக வாழ்வதினால்!





பிறந்த நாள் வாழ்த்து | pirantha naal vaalthu


நாளைய ரோஜாப் பூவாக மலரப் போகும்
இன்றைய ரோஜா மொட்டுக்களோடும்

வையகத்தில் மலர்ந்து விட்டதாய் 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
ஒட்டு மொத்த ரோஜாப் பூக்களின் 
மண வாழ்த்துக்களோடு 
என் மன வாழ்த்துக்களும்!

இது போன்ற மற்றுமொரு பிறந்த நாள் வாழ்த்து கவிதை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
http://nellaibaskar.blogspot.com/2013/11/blog-post_17.html

நிம்மதி கவிதை



என் கவிதை கண்ட சிறகுகள் 
நானும் கண்டு விட்டால் 
நிம்மதியாக இருப்பேன்
ஏழு கடல் தாண்டி 
நிம்மதி இருந்தாலும்!

எங்கே தேடுவேன்
என் அன்னையின் கருவறையில் 
நான் கண்ட அந்த நிம்மதியை !

கல்லறையைத் தேடி | Kallarai Thedi

Sokam
Vaalkai Sokam


முகம் பார்க்காமல் சந்தித்தோம்
இதயம் பார்த்துதான் இணைந்தோம்

பல முறை கூறினாய் 
என் காதல் என்னோடு என்று!

உன்னோடு நான் இல்லை 
அனாதையாய் நான் நிற்க
இனியும் சொல்லாதே 
என் காதல் என்னோடு என்று!

நிஜத்தோடு வாழமுடியாமல் 
நிதம் நீ தவித்தாலும் 
நிழலோடு வாழ்வதாய் 
பல முறை சொல்வாய்!

நிஜம் எனும் மரம் 
வெட்டப்பட்ட பிறகு 
நிழலை நீ எங்கே தேடுவது 
அழிந்து விட்ட நானும் 
அதை எப்படி கொடுப்பது?
காதலை அளித்து
நிம்மதியை அழித்து விட்டாய்!

நிமிட பிரிவுகளை
நிரந்தர பிரிவுகளாக
நிறுத்தி விட்டாய் 
நீ இருந்த என் இதயத்தில்!

சிறகுகள் ஒடித்து 
சிறை பிடிக்கவில்லை 
உன்னை என் இதயத்தில்!
சிறகுகள் விரித்து நீ பறக்க 
சிந்துகிறேன் கண்ணீரை!

காதலில் நீ இல்லை - ஆதலால் 
கானல் நீரில் தாகம் தணிக்கிறேன்.
தாகமும் தணிந்த பாடில்லை 
நித்திரையும் வந்த பாடில்லை - உன் 
நினைவுகளும் தொலைந்த பாடில்லை
நிதமும் ஏமாற்றம் அடைகிறேன்!
இன்றாவது நிம்மதி கிடைக்குமா?

ஆடை கழற்றிய இரவுகள் 
அரை நிர்வாணமாக 
விடிந்து போன பொழுதுகளும் 
விடியாத இருளாய் தோன்ற 
விழிகளும் வருந்துகிறது
நீ இல்லாத காதலில்!

கல்லறையைத் தேடி!





காதல் தோல்வி | Love failure kavithai

Sethu kavi
Setthup po

வன்முறை கண்ட
நம் மனதுக்குள் 
தடுத்து நிறுத்த வரவில்லை 
வழக்கமாய் வரும் 
அந்த சமாதானத் தூதுவன்
சிகப்பு ரோஜா!

தனிமையாய் நீ அமர 
தடுத்து நிறுத்திய
தாகம் கொண்ட வேண்டுகோளை 
தகர்த்து எறிந்தாய்!
தணிந்து விடாத தாகம் என்னுள்!

உனக்குத் தெரியாதா?
உன்னுடனே நான் இருக்க 
நான் இல்லா தனிமையை 
நீ எங்கு சென்று தேடுவாய்?

பதில் சொல்லி விட்டுப் போ
இல்லையேல்
உன் இதழ்களாய் 
உதிர்த்து விடு

செத்துப் போ என்று !




அறிவியல் அதிசயம் | Ariviyal Athisayam | Science Magic

Athisayam
Ariviyal Athisayam


அறிவியலுக்கு அடி பணியாத 
அதிசய வானவில் 
உனது வளைந்த புருவங்கள்!

மனித நேயம் | Manitha Neyam

Vibathu
Saalai Vibathu

சாலை விபத்தில் 
கருவிழியால் நோக்கி 
இதயத்தால் நோக்காமல் 
இரக்கம் மறந்த
கடந்து செல்லும் உயிர்
தவழும் உயிரை மறந்ததே!

வடிகின்ற குருதியில் 
சாலையோர பள்ளமும் 
நிரம்பி வழியுதே!

ஏக்கம் கொண்ட நுரையீரல்
இறுதி சுவாசமோ என நினைந்து
முடிவு தெரியாமல் திணறுதே!

காத்திருக்கும் உறவு முகம்
கலக்கம் அடையுமே
இறுதி நாள் இதுவென்று
கலங்கலான சிந்தனை செய்யுமே!

ஊசலாடும் உயிருக்கு 
மருத்துவ மனை அறையில்
காகித காந்தி பணமும்  
விலை பேசுமே!

விதியும் இறுதி ஊர்வலமும் 
மானுடனாய் மரித்தவனுக்கு
பூலோக உறவுகள்!
மறந்து விட வேண்டாம்

மனித நேயத்தை 
மறந்து விட வேண்டாம்!
மறைத்தும் சென்று 
விட வேண்டாம்!

சாலை விபத்துகளில் உதவிடுவோம்!