சாலை விபத்தில் 
கருவிழியால் நோக்கி 
இதயத்தால் நோக்காமல் 
இரக்கம் மறந்த
கடந்து செல்லும் உயிர்
தவழும் உயிரை மறந்ததே!

வடிகின்ற குருதியில் 
சாலையோர பள்ளமும் 
நிரம்பி வழியுதே!

ஏக்கம் கொண்ட நுரையீரல்
இறுதி சுவாசமோ என நினைந்து
முடிவு தெரியாமல் திணறுதே!

காத்திருக்கும் உறவு முகம்
கலக்கம் அடையுமே
இறுதி நாள் இதுவென்று
கலங்கலான சிந்தனை செய்யுமே!

ஊசலாடும் உயிருக்கு 
மருத்துவ மனை அறையில்
காகித காந்தி பணமும்  
விலை பேசுமே!

விதியும் இறுதி ஊர்வலமும் 
மானுடனாய் மரித்தவனுக்கு
பூலோக உறவுகள்!
மறந்து விட வேண்டாம்

மனித நேயத்தை 
மறந்து விட வேண்டாம்!
மறைத்தும் சென்று 
விட வேண்டாம்!

சாலை விபத்துகளில் உதவிடுவோம்!

0 comments:

Post a Comment

 
Top