சிலர் மற்றும் பலர் | Silar mattrum Palar

சிலர் மற்றும் பலர் | Silar mattrum Palar

Single


கலியுகத்திலும் நீதியின் கரம் பிடித்து 
களைப்பு கொண்டு நடப்பவர் சிலர்
அதையே எள்ளி நகையாடி 
களைப்பு இன்றி நடப்பவர் பலர்!

அரசியலை சேவை என்று 
சுய வாழ்வை மறைந்தவர் சிலர்
அதையே பணம் என்றெண்ணி
படை பலமுடன் வருபவர் பலர்!

துன்பத்திலும் அமைதி காத்து
தனக்குள்ளே சிரிப்பவர் சிலர்
அதையே இன்பமாக்கி இதழால்  
இதயத்தால் சிரிப்பவர் பலர்!

வெற்றியில் நிதானம் கொண்டு 
தொடர் வெற்றி கொள்பவர் சிலர்
அதையே சாதனை என்றெண்ணி
அடங்காமல் திரிபவர் பலர்!

உடலும் அறிவும் செதுக்கிய திறமையை 
தர்மத்திற்கு பயன்படுத்துபவர் சிலர்
அதையே திறமைக்கு விலையென்று 
அதர்மத்திற்கு விலை போவர் பலர்!

சரித்திரங்கள் சிறகு விரித்து 
அணைத்தது இன்றுவரை சிலர்
சரித்திரத்தில் இடம் பிடிக்க நினைத்து 
சறுக்கிக் கொண்டவர் பலர்!