மன சிறகுகள்


இருவரி திருக்குறள் போல
பொய்தனை சொல்லாது
இருவரி இதழ்கள்
நாளும் மெய் பேச
மனமது ஆணையிடனும்!

உன் புகழ் பிறர் சொல்ல
தற்பெருமை நீ கொள்ளாது
தரணியில் நல்வாழ்வு வாழ
மனமது ஆணையிடனும்!

அகம் அது அழுதாலும்
பிறர்முன் சிரித்திட
இன்முகம் நீ காட்ட
மனமது ஆணையிடனும்!

நன்றி மறவா நினைவோடு
தீமை மறக்கும் மனமோடு
நல் மனிதனாய் வாழ
மனமது ஆணையிடனும்!

பெற்றவள் தெய்வ மென 
தந்தை வாக்கு மந்திரமென
பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க
மனமது ஆணையிடனும்!

அகவை முதிர்ந்த முதுமையிடம்
அகத்தால் அன்பு கொண்டு
குணத்தால் மரியாதை செலுத்திட
மனமது ஆணையிடனும்!

பருவங்கள் சொல்லும் காதல்
பள்ளி கல்லூரியில் வந்து விடா
படிப்பில் மட்டும் சிறப்புற்றிட
மனமது ஆணையிடனும்!

அதர்மம் தனை நோக்கி
பாதங்கள் நடை போடா
தர்மம்  தனை நோக்கி
பாதங்கள் நடை போட
மனமது ஆணையிடனும்!

மனசிறகுகள் சரியாய் பயணிக்க
மானுடத்துள் சான்றோனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
விரிப்போம் மன சிறகுகளை!

6 comments:

 1. // நன்றி மறவா நினைவோடு
  தீமை மறக்கும் மனமோடு //

  இவை இரண்டும் போதுமே...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம். போதும் தான்

   Delete
 2. Excellent.Congrats.

  ReplyDelete
 3. எல்லா வரிகளுமே நன்று. வாழ்த்துக்கள்

  ReplyDelete

 
Top