தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil new Yearசூரியக் கதிர் அது
பூமிதனை முத்தமிட 
உலவுகின்ற பனி 
ஓய்வெடுக்க செல்லும்!

இடை அது வளைந்து 
நங்கை இடுவாள் கோலம்
தூரிகை இல்லா
வரைந்த ஓவியமாய்!

விழியின் பளு அது 
இரவில் நித்திரையோடு
இரவல் கனவுகள் 
விடியலோடு செல்லும்!

விடியல் கண்ட விழி 
கலைந்து விட்ட பனி 
நங்கை அவள் ஓவியம்
விடை பெற்ற கனவுகள்
வழக்கம் போல 
இது ஒரு நாளின் விடியல்.

இருந்தாலும் அகம் அது 
அளவில்லா ஆர்ப்பரிக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு 
விழியது கண்டுவிட!

விடியல் காண போகும் 
தமிழ் விழிகளுக்கு 
தமிழ் தோழமைகளுக்கு

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!1 கருத்து: