பட்டுச் சேலை நீ உடுத்தி 
பக்குவமாய் பாதங்கள் நகர்த்த
உன் தோழியரோடு சேர்ந்து 
உன் நாணமும் தலைமை தாங்கும்!

நாணத்தால் அன்ன நடை நீ இட 
காதோரம் எட்டா கொலுசொலி 
உறைந்த வெள்ளை பனிகட்டியாய்
உன் பாத வெள்ளிக் கொலுசுகள்!

தலை சாய்த்த ஒற்றை நெற்கதிராய் 
முகம் தாழ்த்தி நடை நீ இட 
பூமிப் பந்தின் இதயம் அது 
ரப்பர் பந்தாய் துள்ளல் கொள்ளும்!

மணமேடையில் உன் பாதம் பதித்து 
மலர் மாலைகளுக்கு மணம் கொடுத்து 
எனக்கு மட்டும் உன் மனம் கொடுத்து 
மலர் மாலைகள் இட்டுக் கொள்வோம்!

அகம் கொடுத்து அருகில் அமர்வாய் 
அரவணைக்க  துடிக்கும் விரல்கள் 
அன்று மட்டும் மவுன விரதம் கொண்டு 
அய்யரின் மந்திரத்தில் மரியாதை கொள்ளும்!

சிறகுகள் முளைத்து அக்கினி பறக்க 
நாதஸ்வரங்களின்  வாழ்த்து ஒலியில்
விரல்களில் தாலி பற்றி கழுத்தில் இட 
என்னுள் பாதியாய் என் மனைவியாவாய்!  

8 comments:

 1. மனம் துள்ளல் கொள்வது கூட தெரியாது அப்போது...!

  ReplyDelete
 2. வணக்கம்
  கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அருமையான ரசனை! உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்...வாழ்த்துக்கள்..

  ReplyDelete

 
Top