சர்வதேச உலக நீதி தினம் கவிதை | Sarvadesa Ulaga Neethi thinam

சர்வதேச உலக நீதி தினம் கவிதை | Sarvadesa Ulaga Neethi thinam

justice day in tamil
Justice

உன் இதயத் துடிப்பு போலவே 
என் இதயத் துடிப்பும்
உன்னைப் போலவே 
நீ பிறரையும் என்ன வேண்டும்!

உன் அகம் உன் சுற்றம் போல 
என் அகம் என் சுற்றம்
நல் உறவுக்கும் நல் உணர்வுக்கும் 
நீ கை குலுக்கிடல் வேண்டும்!

உன் உடல் உன் குருதி போல 
என் உடல் என் குருதி
நல் சிந்தனைகள் மனதில் ஏற
சாதிகள் உடன் கட்டை ஏறட்டும்!

உன் மதம் போதிக்கும் அன்பைப் போல
என் மதம் போதிக்கும் அன்பு 
மதங்கள் எல்லாம் ஒன்றே 
மனங்கள் முழுமை பெறட்டும்! 

உரிமைகள் முழு உருவம் பெற 
அதிகாரம் அழிந்து போகட்டும்!
எல்லாமே சில காலம்
குற்றங்கள் மண்டி இடட்டும்!  

தனி மனித ஒழுக்கங்கள் 
முழுமையான ஒழுக்கம் பெறட்டும்!
நீதி தேவதையின் தராசுக்கு
வேலை இல்லாமல் போகட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக