கருப்பு | Karuppu

Black color
Karuppu Kavithai

கற்சிலையின்  கருப்பு
கண்களுக்கு கடவுளாய் தெரிய
கண்டறிந்த கண்களின்
கருவிழியும் கருப்பாய் அமைய

நரை கண்ட மயிர்க் கற்றைகள்
நலமுடன் இருப்பதாய்
கருப்பு சாயங்கள்
கருவிழிக்கு மெய்யான பொய் பேச

கவிதை கண்ட கவிஞனின்
காரிருள் கொண்ட இரவுகள்
கருப்பு என்று சிந்தனை சொல்ல

பிரசவித்த குழந்தை
தங்கிவிட்ட பத்து மாதங்கள்
கருவறை கருப்பு என்று சொல்ல

வையகத்தில் பெண்மையாய் மலர்ந்தவளின்
சதை கொண்ட தேகங்கள்
கருப்பு என்று கருவிழிகள் பேசினால்

பெண்மை கொண்ட மென்மை புரியாமல்
நாவும் உதிர்த்து விடுகிறது
நீ அழகு இல்லை என்று!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக