தீபாவளி கவிதை

தீபாவளி கவிதை

Diwali
Deepavali Kavithai


பகல் விளக்குப் பகலவனாக 
பட்டாசு வெளிச்சம்
இரவு வானில் வர்ணஜாலம் காட்ட!

காலை நேரப் பனி முகில் கூட்டமாய் 
கந்தகப்  புகை கரை சேர இடம் தேட !

எரிந்து போன பட்டாசு சாம்பலாக 
கரைந்து போன காகித பணங்கள்
கருவிழிக்கு சிந்தனை தூண்ட !

ஒரு நாள் ராணுவ வீரனாய் 
மழலைத் துப்பாக்கிகள்
குழந்தைகளுக்கு மகிழ்வூட்ட!

புத்தாடை கண்ட களிப்பில் 
புது முக பொலிவு கண்டதாக
கண்ணாடி பிம்பங்கள் க(வி)தை பேச!

விரல் கோதி விடும் களிப்பில் 
சுகம் கண்ட மயிர் கற்றைகள்
காலை கண்ட எண்ணைக் குளியலாக!

சிந்தனை கொண்ட மானுட மனதில்
சிறிதளவு மக்கிப் போன நரகாசுரன் கதை
சிறிதளவும் மக்காத பட்டாசுகள்!

அகல் விளக்கை புள்ளியாக இட்டு 
தீபங்களின் ஒளியை கோலமாக வரைந்து 
வாயில் தோறும் தீபங்கள் ஏற்றிடுவோமாக!
இறை அருள் பெற்றிடுவோமாக!
ஒளி காட்டும் வழி தீபாவளி என்று!


1 கருத்து: