Tharkolai Suicide |
சமீபத்திய ஒரு தற்கொலையை மையமாக வைத்து இந்த கவிதை எழுதி உள்ளேன். இதில் சொல்ல வருவது என்னவென்றால், தற்கொலை செய்தவரை கிண்டல் செய்ய வேண்டாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், அவர்கள் நிம்மதி தேடி இந்த முடிவை எடுத்து இருப்பார்கள்.
விண்ணைத் தொடும்
விளிம்பில் இருந்து
புவி நோக்கி நீ குதித்து
விண் நோக்கி நீ சென்றாய்!
மன வேதனைகள்
உன்னை தூரத்த
தனிமையும் அதற்கு
தோள் சேர்த்து
கை கோர்க்க
காலன் அவன்
கணித்து விட்டான்!
உடல் விட்ட உயிரை
வழிந்தோடும் குருதி சொல்ல
படிந்து விட்ட குருதி
பல பேருக்கு
காட்சி பொருளாய் தெரிய
படித்தவன் எவனுக்கும்
புரியவில்லை நீ பட்ட துயரம்!
கட்டிடத்தின் உயரத்தை
கருவிழி கொண்டு அளந்தவன்
உன் உள்மன துயரத்தை
அளக்க வில்லை!
மிஞ்சியது என்னவோ
உன் குடும்ப வேதனையும்
படித்தவனின் கிண்டலும்தான்!
அகல் விளக்கு ஏற்றி அழுதது
உன் அன்னை மட்டும் அல்ல
நானும் தான்!
உன் ஆன்மா நிம்மதி கொள்ள
நிரந்தரமான சாந்தி அடைய
சொர்க்கம் சென்று விட
இறைவனை வேண்டுகிறேன்!
இறந்த பிறகாவது கிடைக்கவிட்டும்
நீ தேடிய நிம்ம்தி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக