குழந்தைகள் தினம் | Childrens Dayபுழுதி பறக்கும் வீதியில் 
புயல் வேக ஓட்டம் தினமும்!

சிரிப்பின் சிதறல்கள் 
சிந்தாமல் இல்லை தினமும்!

செவிச்செல்வம் தேடி 
சென்ற நடைபயணம்  தினமும்!

புத்தகப் பையின் சுமைகள் 
புதுவித சுகமாய் தினமும்!

காகித பணம் காணாமல் 
காலணா கிடைத்தது தினமும்!

குளம் கிணறு என்று 
குளித்த நாட்கள் தினமும்!

விளையாட்டாய் ஒரு விஞ்ஞானம் 
வீதியில் காந்தங்களோடு தினமும்!

மிதிவண்டியில் அதிவேக பயணம் 
மிதிக்காமல் இல்லை தினமும்!

அன்னை மடியில்
ஆர்ப்பரிக்கும் குழந்தை போல

அளவற்ற்ற மகிழ்ச்சி கண்ட 
அந்த குழந்தை நாட்கள் 
அழைப்பு விடுத்தால் வருமா?

No comments:

Post a Comment