இன்றைய தமிழ் | Today Tamil

tamil
Indraiya Tamil

வளர்த்து விட்ட தமிழை 
உள் நாவு வெளி கொணர 
ஆங்கிலம் பேசும் நுனி  நாவு 
தமிழுக்குத் தடை போட 
இங்கே அவமானம் 
தமிழுக்கு சமர்ப்பணம்!

தமிழில் சினிமா பெயர்
தமிழில் படித்தால் வேலை 
தமிழை வளர்க்க 
தமிழ் நாட்டுச் சலுகை!

கற்காலம் கண்ட தமிழ் 
முதுமை கண்ட கிழவியாய்
முடங்கிப் போகிறது  
கலாச்சார மொழியினால்!

தாய்மை அடைய நினைத்தவள் 
கருச்சிதைவை அடைந்தது போல
துடித்துப் போகிறேன்
தரணியை ஆண்ட தமிழ் 
பொது இடங்களில் 
தலை  கவிழும் போது!

புது முகம் கண்ட
இரு தமிழ் முகம்
அறிமுகம் என்னவோ
ஆங்கிலத்தில்தான்!

தமிழன் என்று சொல்ல
தலை நிமிர்ந்து நிற்க 
தமிழனால் முடியவில்லை
போலி வாழ்க்கை
உண்மையாக வாழ்வதினால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக