நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai

நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai


nanbarkal
Friendship day kavithai


உறவுகள் பலவிதம் என்று 
உலகம் விதைத்து இருக்கிறது 
நட்பு என்ற விதை ஒன்று 
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!

ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை 
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை 
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை 
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!

காதலை சல்லடை இட்டால் 
வயதைச் சொல்லும் 
நட்பை சல்லடை இட்டால் 
உயிரை உணர்வை சொல்லும்!

விவரம் அறியும் முன் 
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை 
நட்பு பிறக்க உயிரே தேவை!

பதில் இல்லா வினாக்கள் 
நட்பில் எழுவதில்லை 
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை! 

குழந்தையின் கிறுக்கல்கள்தான் 
ஆனாலும் புரிந்து விடுகிறது 
நட்பாக கிறுக்கிப் பார் 
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!

இரவின் இடைவெளி பகலா 
பகலின் இடைவெளி  இரவா
உயிரின் இடைவெளி நட்பா 
நட்பின் இடைவெளி உயிரா!

மயில் இறகில் அழகு விழிகள் 
குயில் குரலில் ஓர் சங்கீதம் 
தூணிலும் துரும்பிலும் இறைவன் 
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!

எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக