சாலை விதிகள் | Saalai Vithikal

சாலை விதிகள் | Saalai Vithikal

Indian Road rules in tamil
Saalai Vithak Kavithaiவீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!

தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!

வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!

விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!

வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!

ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!

முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!

வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக