சிந்தனை விட்டு அகல மறுக்கும் 
சிலுவையில் அறையப்பட்ட
குருதி கசிந்த நினைவுகள் அது!

விசா எதுவும் இல்லாமல் 
விண்ணோடு உறவு கொண்டு 
வீழ்த்த வருகிறது 
சொந்த ஊர் சோகங்கள்!

உறவு தேடி வாழ வந்தவளை 
வாழும் உறவுகள் சொன்னது
அகதி இவள் என்று!

கருவாய் வந்த நினைவுகள் 
மழலையாய் முதிர்ச்சி பெற
அனைத்துக் கொண்டாள் இவள்.
சோகங்களின் அன்னை இவளோ?

கருவிழி சிந்த மறந்த கண்ணீரை
இவள் இதயம் தினம் சிந்தும்.
நித்திரை என்னவென்று அறியா
இவளின் ஆழ்மனது முனகல்கள்
சோகங்களின் தாலாட்டுகள்!

அளவுகோல் கொண்டு அளவிடமுடியா
அளவில்லா சோகங்கள் இவளோடு
நிழற்படம் இவள் எடுக்க 
நிஜமாய் தெரிகிறது சோகங்கள்!

ஊனம் இல்லா உள்ளத்தால் அழுது 
இரு வரி இதழ்களாள் சிரித்து
மெய்தனை கசியாமல் மறைத்து 
சோகம் வெளிக் கொணராதவள்!

நரகம் சென்றது இவள் சந்தோசம்
நடை பிணமாய் இவள் வாழ்க்கை 
நான் ஏது செய்வேன்? 
இவள் அழுகின்றாள் அழுகின்றாள்!

2 comments:

 1. வணக்கம்

  கவிதையை படித்தபோது.... மனம் நெகிழ்ந்தது.. மனிதனாக பிறந்தால் சோதனையும் வேதனையும் சுமக்க வேண்டியதுதான்....
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். எதிர்த்து நின்று போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

   கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி!

   Delete

 
Top