அகம் அது சந்திக்காமல்
விழிகள் அது சந்தித்தால்
விளைவுகள் வீபரீதமானது
மரித்து விட்டது என் காதல்!

இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வில் 
வழிப்போக்கனாய் வந்திருகிறது
வலி கொடுத்த அந்த காதல்!

விழியின் இறுதித்துளி கண்ணீரில் 
வீழ்ந்து கிடக்கும் காதல் சுகத்தால்
நடை பிணமாய் வாழ்வு என்று 
பொருத்தம் காணும் எதிர்காலம்!

சுகமாய் வந்த காதல் 
சோகமாய் சென்று விட 
நினைவுகள் உயிர் இழந்து 
இதயம் அது துடித்தே இறக்கும்!

காதலுக்கு அழகு கூட்டி
பொய் கண்ட என் கவிதைகள் 
மெய் சொல்ல மறந்தனவே!
காதல் பொய் என்று!

இனியொரு காதல் 
இதயம் அது காணாது!
மரித்து போன காதல் உயிர்த்தெழ
காதல் ஒன்றும் இயேசு அல்ல!

அகால மரணம் கண்டது 
என் காதல்!

5 comments:

 1. நினைவுகளுக்கு மரணமில்லை...

  ReplyDelete
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. என்னை முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தவரே நீங்கள்தான்!

   பிள்ளையார் சுழி நீங்கள் போட்டதால் எல்லாமே நன்றாக நடக்கிறது.
   மிக்க நன்றி!

   Delete
 3. மறப்பது சுலபம் இல்லை. நினைத்தால் மறக்க முடியும்.

  ReplyDelete

 
Top