கவிதை எழுதி பேனா மை
காலியாகி இருந்திருக்கும்!
அவள் விழியோரம் மையில் 
விளைந்த கவிதையை 
விதைத்திருப்பேன்! 

அவள் மூச்சுக் காற்றை சேகரிக்க 
முயற்சி எடுத்து 
வெற்றியும் கண்டு இருப்பேன்!
பிறர் தீண்டாமல் இருக்க அதை 
நிலாவில் சேகரித்தும் வைத்திருப்பேன்!

அவள் சிரிப்பின் சிதறல்கள் 
என்  கவிதையின் கருவாயிருக்கும்!
அவள் வாசித்த கவிதை வரிகள் 
உதட்டோர சிவப்பாய் 
ஒட்டி இருந்திருக்கும்!

அவள் தேகம் கிள்ளி விளையாட 
ஆசை பட்டிருப்பேன்!
அதனால் தினமும் நகம்
வெட்டி இருப்பேன்!

கடல் அலை முத்தத்தில் 
கால் நனைத்திருப்போம்!
கரையாத நினைவு அது 
கல்வெட்டுகளாக மாறியிருக்கும்!

அவள் பாதத்தில் 
வெள்ளிக் கொலுசு ஒன்றை 
மாட்டி இருப்பேன்!
எட்டாவது  ஸ்வரமாக
உலகுக்கு உணர்த்தியிருப்பேன்! 

இன்பத்தின் எல்லை 
எதுவென்று தேடியிருப்பேன்!
பிரிவுக்கு இல்லை எல்லை 
என்று முடிவெடுத்திருப்பேன்!

மழையோ வெயிலோ 
ஒரே குடையில் பயணித்திருப்போம்!
உடல் பொய் உயிர் மெய் 
பல கலியுக காதல்களுக்கு 
உணர்த்தியிருப்பேன்!

சாஸ்திரம் அடங்கிய 
திருமண அழைப்பிதழில்
கவிதையாய் எங்கள் பெயரை 
அச்சடித்திருப்பேன்!

எனக்கொரு காதலி இருந்திருந்தால்!!!

2 comments:

  1. அந்த அதிர்ஷ்டசாலி விரைவில் வருவார்கள்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதையோடு உங்கள் காதல் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

 
Top