Tamil Kavithaigal | தமிழ் கவிதைகள்

வானத்து நிலா - done

வானத்து நிலா
வானத்து நிலா

மழை முத்தமிட்டோ 
வெயில் கோபப்பட்டோ  
வானத்து வீட்டில் 
தொங்கும் வெள்ளியொன்று 
கருத்து விட்டது!


காதலர் தின கவிதை - பிப்ரவரி - 14

காதலர் தினம்
காதலர் தின கவிதை

ஆரம்பம் முடிவு விழியில் தெரியா  
ஆராய்ச்சியிலும் பிடிபடா 
காலாவதி பெயரளவிலும் இல்லா 
காலம் கடந்தும் வாழ்ந்தும் வாழ்ந்திட்ட
வாழ்ந்து கொண்டிருக்கும் காதலே!

மெதுவாய் சுகமாய் நீ என் இதயம் தொட 
என் கரமோ காதல் கவிதை தொட 
நழுவி விட்டன  கவி வார்த்தைகள்
எட்டிப் பிடித்து கரம் கொடுத்தாய்! - காதல்
கரமும் பிடித்தேன்! கவிதையும் பிடித்தேன்!

உதிக்கும் சூரியனும் மலரும் நிலவும் 
புரியாத வார்த்தைகள் தினம் சொல்லும் - காதலே
என் விழி நோக்கி விளக்கவுரை சொல்வாய்!
கண்டதெல்லாம் புரிகிறது
காதல் மட்டும் புரியவில்லை - இருந்தும்
காதலிக்க தகுதி உன்னால் பெற்றேன் !

எத்திசை தேடினும் நிலவாய் காதலி முகம்
நேர் எதிரே எதிரொலி எதிரொளியாய்
காதலே ! எல்லாமே உன் மாய ஜாலம்!
காதல் என்றால் சும்மாவா ? உலகமே குலுங்கும்!
வான் புவி எத்திசை நோக்கினும் காதலே!

தனிமை சற்று கிடைத்தால் 
தானியங்கி ஒலி பெருக்கியாய் 
இரு வரி இதழ்கள் மாறும்!
இலவச இணைப்பாக 
இதழ் சிரிக்கவும் செய்யும்!
எல்லாமே காதல்/காதலியின் பரிசு!


மாலை மயங்கும் சூரியன் 
காலையில் விழிக்கும் 
பொழுது மறைந்தாலும் 
பொழுது மலர்ந்தாலும் 
காதலர்கள் விழிப்பதில்லை!
விழிக்காமல் இருப்பதில்
வியப்பு ஏதும் இல்லை!

மாலை கருக்கல் மலர வேண்ட
கதிரவனை வழி அனுப்பி 
சில மனது கவிதை தேடி 
காதலி முகம் அதில் காணும்!
கவிதை அறியா மனது 
கனவில் கால் பதிக்கும்!
கவிதையும் கனவும் 
காதலின் இரு கண்கள்!

முழு நிலவு வானில் தொங்கும் 
எதிரொளி நிலவு கடல் அலையில் 
அங்கும் இங்கும் சிதறும்!
வேடிக்கை பார்க்கும் முழு நிலவு 
உன்னத சுகம் அதில் காணும்!
காதலை விளக்கியாயிற்று!

தினம் ஓர் இன்பம் கிடைக்கும்
அந்த இன்பத்திற்கு பெயர் சூட்ட 
மனமும் மூளையும் தடுமாறும்!
இந்த இன்பமும் தடுமாற்றமும் 
இறுதி ஆயுள் வரை வேண்டுமா?
எனில் - காதலித்துப் பாருங்கள்! 


வாழ்க காதல் ! வளர்க காதலர்கள்!

காதலர் தினத்துக்கான இன்னும் ஓர் கவிதை படிக்க லிங்கை கிளிக் செய்யவும்...





குடியரசு தின கவிதை | Kudiyarsu thina Kavithai

Kudiyarsu thinam
Kudiyarsu thina kavithai


இடைவெளி இல்லா காற்றாய் 
பாரதம் எங்கும் சமத்துவம் தொடர 
நகருகின்ற தனி ஊசலாய் 
சம உரிமை தொடர்ந்து நீடிக்க 
காலம் காட்டும் கடிகாரமாய் 
அனைவருக்கும் ஒரே சட்டம்!


அன்று முதல் இன்று வரை 
முடிவை எட்டா தீப ஒளியாய் 
வேற்றுமையில் ஒற்றுமை 
நம்மோடும் நம் உணர்வோடும் 
தினமும் பயணம் செய்ய 
வழி வகுத்த அரசியல் அமைப்போடு 
அனைவரும் பயணிப்போம்!

இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!







இழப்பில் மகிழ்ச்சி | சிகரெட் கவிதை

நழுவிய சிகரெட்
நழுவிய சிகரெட் 

விரல் நழுவிய சிகரெட் 
விரக்தியில் விழிகள் 
மகிழ்ச்சியில் நுரையீரல்!







tamil christmas songs | தமிழ் கிறிஸ்துமஸ் பாடல்

Christmas
Tamil Christmas song

அகரத்தின் அகரமே, இயேசுவே
உலக அகரத்தில் நீ அகரமே!

இதழ் படிக்கும் பைபிளிற்கு நீயே அகரம்
படித்து உணரும் இதயத்திற்கும் நீயே அகரம்
நகரும் உலகிற்கு உந்தன் ஒளியே அகரம் - (2)
தடம் பதிக்க வரும் எல்லா கருவுக்கும் நீ அகரம் 
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2)

உருகும் அன்புக்கு உலகில் நீயே அகரம்
உருவாகும் அன்புக்கும் நீதான் என்றும் அகரம்
உன்னதங்கள் எல்லாவற்றிலும் நீதான் அகரம் 
அதை காத்திட துடிப்பதில் நீதான் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்

தாய் தேற்றும் அன்புக்கு உந்தன் அருளே அகரம்
தவமாய் தந்தை அருளும் வலிமைக்கு நீயே அகரம் 
குதூகலமாய் குடும்பம் காரணம் நீதான் அகரம் 
உன் அகரத்தின் துணையாய் உன்னோடுதானே என் அகரம் - (2)
அகரமே, அகரமே, நீயே அகரமே! (2) இதழ் படிக்கும்









Birthday kavithai in tamil | காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து

birthday
birthday kavithai in tamil


பூமியில் பிறந்து
நிலவில் மோதி
எதிரொலித்த - உன்
பிறந்த நாள் வாழ்த்துகளில்
என் வாழ்த்தும் ஒன்று !
அதுவும் முதன்மையான ஒன்று!







கட்டாய மின் தடை

Power
Minthadai

பூமிக்கும் வானுக்கும் 
கட்டாய மின் தடை 
அமாவாசை நாளில்! 

பைத்தியக்காரன் - done

Paithiyam
Paithiyakaaran Kavithai


பாதங்கள் வகுத்த வழியோடு
வலிக்காமல் பயணித்து
உடல் சொல்லி அமர்வது என் வழக்கம்!

சில நேரம் காதல் கொண்ட வாழ்க்கை
சில நேரம் உதறிய உறவுகள் - என்னை 
தனிமையில் உலவ வைக்கிறது!

சில நேரங்களில் சாப்பாடு பிச்சையாக 
சில நேரங்களில் தானமாக 
சில நேரம் விதி உடன் வருவதில்லை!

உலகத்துக்கு என்னை பிடிக்கவில்லை 
எனக்கும் உலகம் புடிக்கவில்லை 
பூமிக்கு தத்துப் பிள்ளை - ஆதலால் 
விட்டு வைத்திருக்கிறது!

அழகை மயக்கும் ரோஜாவும் தெரியும் 
பகையை முடிக்கும் கூர்முனை கத்தியும் தெரியும் 
காதலும் பகையும் தெரிவதில்லை!

இரவில் தாய் மடி தேடி அலைந்தேன்
தேடலில் எதுவும் எட்டவில்லை 
சாலையோர மேடையே இறுதியில் தாய் மடியாய்!

நான் உளறுவது பிற விழிகளுக்கு தெரியும் 
நான் அழுவது எனது விழியில் புலப்படாது 
பைத்திய மனஙகள் மனதுக்குள் அழுகிறது!

பனியும் வெயிலும் பாடம் நடத்தின 
கிழிந்து போன என் கந்தல் துணிக்கு 
எந்த பாடமும் விளங்கவில்லை!

கண்ணீர் வந்தே தேய்பிறையானேன்
மதிப்பில்லா என் கண்ணீருக்கு
வளர்பிறை என்ன தேய்பிறை என்ன ?

எல்லை என்று சொல்வது எதிலும் உண்டு 
எண்ணில் அந்த எல்லையை தேடினேன் 
எட்டாத என் எல்லையை என்னவென்று சொல்ல !

வயிறு பசித்தால் சாப்பாடு 
தாகம் எடுத்தால் தண்ணீர் 
பஞ்சத்திற்கு வளைந்தது என் உடல்!

இதுவும் கடந்து போகும் என்ற 
பொருந்தாத வார்த்தையுடன் அழுகிறேன் 
கடைசிவரை பைத்தியக்காரனாய்!












ரசிகர்கள் அல்ல வெறியர்கள்

Cinema
Cinema Veriyarkal


சினிமா என்றால் பொழுதுபோக்கு 
மறந்து விட்டது பல பேருக்கு 
சிந்தனை எல்லாம் மழுங்கி இருக்கு 
விழிக்காத மூளை மயக்கத்தில் இருக்கு!

நடித்தவன் உச்சியில் இருப்பான்  
ரசித்தவன் எங்கே இருப்பான் 
ரசித்த போதை தெளிந்து விடும் 
வெறி கொண்ட போதை கூடி விடும்!

முதல் முறை திரை நோக்க 
சில நூறு ரூபாய்கள் 
இரண்டாம் முறை திரை நோக்க 
சேமிப்பதில் அரை குறைகள்!

நடிகனின் முகத்தில் முகத்திரை - அதை 
அறியாத மனதில் மனத்திரை 
முகத்திரை விலகி விடும் 
மனத்திரை ஒட்டி விடும்!

அரசியலுக்கு சினிமா முதல் படி  
ரசிகனுக்கு அதுவே கடைசி படி 
இனி இங்கு இல்லை வேறு படி 
எப்படி வாழ்வது முறைப்படி!

திரை வடிவில் மனம் கெட்டான்
இனி எதன் வடிவில் அதை மீட்பான் 
மனமும் திரையும் ஒன்றல்ல 
மனம் முன் திரை பெரிதல்ல!

அஜித்தும் நடிகரே விஜயும் நடிகரே
ரசிகன் இருவரையும் ரசிக்கிறான் 
வெறியன் ஒருவரை துதி பாடுகிறான் 
இவர்கள் ரசிகர்களே அல்ல வெறியர்கள்!










சிறகுகளுக்காய் ஓர் ஏக்கம்

Siraku
Sirkukal



சிறகுகள் கிடைத்து 
வானம் பக்கமாகும்
அந்த நாள் எந்த நாளோ ?

கிடைத்தே தீரும்

Kidaithal
Kidaithe Theerum

உதவி இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் நேராது 
நம்பிக்கை இல்லாத சூழல் 
ஒரு பொழுதும் வாராது!

செய்து விட்ட புண்ணியங்கள் 
பலன் தராமல் போவது இல்லை
செய்து விட்ட பாவங்கள் 
கை விட்டுப் போவது இல்லை!

கைக்கு எட்டாத காதலியை நினைத்து
எழுதிய கவிதைகள் பலம் பெறும்!
எட்டாத வெற்றியை தொட்டு விட
எட்டும் முயற்சிகள் தோற்பதில்லை!

விழி கசிந்த கண்ணீரில்
மெய்மை சுரந்திருப்பின்
வருங்காலம் பதில் சொல்லும்!
காலம் நீளலாம், பொய்மை நீளாது!

நிமிர்ந்து நிற்பது தைரியம் என்று
தோள் நிமிர்த்தி சொல்பவர்
வளைந்து கொடுப்பது பலகீனம் என்று
தவறிய சொல் வழி நடப்பர்!

அறிவாளி என்று தன்னை  உணர்ந்தால்
முட்டாளாய் முன்னோக்கி செல்வாய்
விதியானாலோ அறிவினாலோ
கிடைப்பவை நிச்சயம் கிடைத்தே தீரும்!








காட்சிப் பிழை

Tharai
Kaachip Pilai


சரி செய்ய முடியாத 
காட்சிப் பிழை 
தரை தொடும் வானம்!




கிருஷ்ண ஜெயந்தி கவிதை

Krishnar
Krishna Jeyanthi Kavithai


கீதையின் குருவாய்
வாழ்க்கையின் வழி காட்டியாய்
எண்ணங்களின் கண்ணாடியாய்!

புல்லாங்குழல் காற்றில் இசையாய் 
குறும்புகளில் ஓர் கதையாய்
மயிலிறகில் ஓர் கண்ணனாய்!

மேகத்தில் மறையும் நிலவாய்
வாடா நட்சத்திர பூவாய்  
வெண்ணெயையும் தாண்டிய வெண்மையாய்!

உடலைத் தாண்டிய ஆன்மாவாய் 
உடலைத் தாண்டிய வீரமாய்
உன் நாடகத்தில் நானும் ஒருவனாய்!

நீல நிறத்தில் ஓர் குழந்தையாய் 
அதர்மத்திற்கு எதிராய் தர்மமாய் 
கிருஷ்ண வேடமிட்ட மழலையாய்!

ஆயர்பாடியில் ஓர் கண்ணனாய்
லீலைகளில் ராச லீலையாய்
காதலை எல்லாம் ஆட்கொண்டவனாய்!

மரணம் எட்டாத என் ஆன்மாவாய் 
கிருஷ்ண ஜெயந்தி அவதாரமாய்
வெண்மை இதயங்களோடு வாழ்வாய்!

ஸ்ரீ ராம ஜெயம்!










அழகு மாறா விழிகள் | Alaku maara vilizhikal

Alaku
Alaku vilikal


அறிவியல் ஆர்வம் இல்லை 
ஆர்வம் இருந்திருந்தால் 
என்றோ சொல்லியிருப்பேன் 
கருப்பு வானவில் உன் புருவம் என்று!

விழிகளின் கவசமாய் 
இமை முடிகள் 
உன் விழி 
கூர் ஆயுதமாய் இருக்க 
எதிர் பார்வை 
சுடத் துடித்தேன்
என் கவசங்களோ 
வெற்று முடிகளாய்!

இயல்பிலே 
விழியோரம் கண்மை கொண்டு 
அழகு தேவதையாய்
 பூமியில் பிறந்தவள்
கண்மைக்கு 
உன் விழியோரம் வேலை இல்லை 
இயல்பாய் வசியமாய்
 வசிய மை கூடுதல் சிறப்பு!

புவி ஈர்ப்பு விசையையும் ஏமாற்றி 
உன் விழி ஈர்ப்பு விசையால் 
புவியில் விழுந்தது நிலவு என்று 
அறிவியலும் வரலாறும் 
நாளை மாறும்!

என்றும் அழகு மாறா 
உன் விழிகளுக்கு 
சமர்ப்பணம்!







பறிக்கப்படுகின்ற முத்தங்கள் | Parikapadukindra Muthankal

Mutham
Thaaiku Mutham


முகத்தில் துளிர் விட்ட 
தாடி என்ற ஒற்றை காரணத்தினால் 
இங்கே பல முத்தங்கள் 
பறிக்கப்படுகின்றன!
தந்தையிடம் இருந்து தாய்க்கு! 




கலைஞர் கருணாநிதி கண்ணீர் அஞ்சலி | Karunaanithi Anjali

Anjali
Karunanith



ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு முதல் பட்டதாரி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு இலவச மின்சார விவசாயி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு வள்ளுவன் சிலை!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு மாற்றுத் திறனாளி!

ஏதோ ஒரு புள்ளியில் 
உன்னால் ஒரு திருநங்கை!

இன்னும் எத்தனை புள்ளிகளோ 
அத்தனை புள்ளிகளும் முத்தமிடுகிறது
உன் கையொப்பம் இட்ட எழுதுகோலில்!

எழுதுகோலுக்கு மரணம் இருக்கலாம் 
எழுதிய எழுத்துக்களுக்கு மரணம் இல்லை!

எனது இனிய உடன் பிறப்புகளே!










தலைக் கவசம் | Thalai kavasam

helmet
Thalai Kavasam kavithai


உயிரைக் காக்க ஓர் கடின உழைப்பு
கொட்டுகிறது வியர்வைத் துளிகள் 
தலைக் கவசம் உள்ளே!

காந்தக் கண்ணழகி


kannalaki
Kaantha Kannalaki


காந்தமாய் பிறர் பார்வையை 
தன்னுள் இழுத்துவிட்டு 
கண் திருஷ்டி என்று சொல்லி 
ஊரைத் திட்டுகிறாள்!
காந்தக் கண்ணழகி ஒருத்தி!






நண்பர்கள் தின கவிதை | Nanbarkal thina kavithai


nanbarkal
Friendship day kavithai


உறவுகள் பலவிதம் என்று 
உலகம் விதைத்து இருக்கிறது 
நட்பு என்ற விதை ஒன்று 
இன்று ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது!

ஒருமையும் (காதல்) பிடிப்பதில்லை 
தனிமையும் (ஒரு தலை காதல்) பிடிப்பதில்லை 
தோழர்கள் (நண்பர்கள் ) என்ற பன்மை 
நட்புக்கு (உயிருக்கு ) பிடித்திருக்கிறது!

காதலை சல்லடை இட்டால் 
வயதைச் சொல்லும் 
நட்பை சல்லடை இட்டால் 
உயிரை உணர்வை சொல்லும்!

விவரம் அறியும் முன் 
நட்பு பூத்து விடுகிறது!
காதல் பிறக்க ஹார்மோன்கள் தேவை 
நட்பு பிறக்க உயிரே தேவை!

பதில் இல்லா வினாக்கள் 
நட்பில் எழுவதில்லை 
நட்பான உறவுகள் பிரிவதில்லை
வேரிட்ட மரங்கள் நகர்வதில்லை! 

குழந்தையின் கிறுக்கல்கள்தான் 
ஆனாலும் புரிந்து விடுகிறது 
நட்பாக கிறுக்கிப் பார் 
ஆஹா! கிறுக்கல் எல்லாம் கவிகள்!

இரவின் இடைவெளி பகலா 
பகலின் இடைவெளி  இரவா
உயிரின் இடைவெளி நட்பா 
நட்பின் இடைவெளி உயிரா!

மயில் இறகில் அழகு விழிகள் 
குயில் குரலில் ஓர் சங்கீதம் 
தூணிலும் துரும்பிலும் இறைவன் 
துடிக்கும் இதயத்தினில் ஓர் நட்பு!

எனது இனிய தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!







காதல் கனி | Kaathal kani


kani
Kaathal Kani


எட்டாத கனி அது காதல் என்று 
சிலர் பறிக்க முயற்சி செய்கிறார்கள் 
எட்ட முடியவில்லை ஆதலால் 
சிலருக்குப் புளித்து விடுகிறது!

எட்டிப் பிடித்ததாய் உணர்ந்தவன் 
முழுவதும் ருசிக்கும் முன் 
தவறான முடிவெடுத்து விடுகிறான் 
இதற்கா ஆசைப் பட்டோம் என்கிறான்!

எட்டிப் பிடிக்கவும் முடியவில்லை 
எட்டிப் பிடிக்காமல் இருக்கவும் முடியவில்லை 
இரண்டிற்கும் இடைப்பட்ட சம நிலை 
தினமும் ருசிக்கிறான் காதல் கனியை !








சாலை விதிகள் | Saalai Vithikal

Indian Road rules in tamil
Saalai Vithak Kavithai



வீட்டுக்கொரு வாகனம்
கட்டாயமில்லா கட்டாயம்
விதிமுறை அறிந்து பயணித்தால்
விபத்து ஒதுங்கி பயணிக்கும்!

தலைக்கொரு கீரிடமாய்
உயிர்க்கொரு கவசமாம்
தலைக்கவசம் கம்பீரமாய்
தலையினில் முடி சூடட்டும்!

வளைவுப் பாதையோ நளினம்
நளினத்திலே வேண்டுமோர் கவனம்
வாகனித்தில் ஒலி எழுப்ப
விபத்தை புறந் தள்ளலாம்!

விதிமுறை மீறிய வேகம்
விதியின் வசம் செல்லும்
விதியின் ஆணையோ
விபத்தை கொடுக்கும்!

வாழ்வில் பிற தடை கடந்து வர
வேகத் தடை கரம் கொடுக்கும்
வேகத் தடை அறிந்து பயணிக்க
அசம்பாவிதத்தில் தடை ஏற்படும்!

ஒளி நிற விளக்குகளில்
ஓர் மௌன ராகம்
ஓராயிரம் அர்த்தங்களுடன் !
நில் கவனி செல்!

முகப்பு விளக்கு பகலில் ஒளிர்ந்தால்
வாகன விபத்து மிகவும் குறைவு
முகப்பு விளக்கு பகலில் ஒளிரட்டும்
வாகன முகம் அதில் ஜொலிக்கட்டும்!

வாழ்க்கைக்கு ஓர் நெறிமுறை
சாலைகளுக்கு ஓர் விதிமுறை
நெறிமுறை மீறினால்
அவன் மனிதனே இல்லை!
விதிமுறை மீறினால்
அவனுக்கு வாழ்வே இல்லை!







மகளதிகாரம் - அட்சய பாத்திரங்கள் | Makalathikaaram

makal
Thanthai Makal



விருப்பமில்லா வெயிலோடு
சண்டையிட்டு களைத்து திரும்ப
முகம் பார்த்த என் வீட்டு கண்ணாடி 
முகம் அலச உத்தரவிட்டது!

இரு கரங்கள் சிறு குவளையாய்
பொறுக்கிய நீர் தன்னில் 
முகம் அலசி தொலைகாட்சி முன்
சம்மனமிட்டு அமர்ந்தாயிற்று!

தொலைக்காட்சி ஒலியை தாண்டி 
செவியில் நுழைந்தது அந்த ஒலி
அப்பா சாப்பாடுறீயா ? - திரும்பினேன்
வெற்றுப் பாத்திரம் ஏந்தி என் மகள்!

அம்மா சாப்பாடு தருவாள் என்றேன்
அகம் கடிந்து கொண்டாள்
இன்று என் சமையல்
இப்போ நீ சாப்புடுவீயா ? மாட்டியா ?

மகளதிகாரம் என்பதால் அடங்கி விட்டேன்
பரிமாறு சாப்பிடலாம் என்றேன்
வெற்றுப் பாத்திரங்கள் 
அணி வகுப்பெடுத்து முன் அமர்ந்தன!

இங்கே எங்கே சாதம் இருக்கிறது என்றேன் 
விழி கொண்டு தேடியவள் 
வெற்றுப் பாத்திரம் கையில் ஏந்தி 
வெற்றுக் கரண்டியோடு பரிமாறினாள்!

இதழ்கள் திறந்து சிரித்து விட்டேன்
சாப்பிடும் போது என்ன சிரிப்பு ?
ஒழுக்கம் கற்றுக் கொடுத்தாள்
மீண்டும் மகளதிகாரம் அடங்கி விட்டேன்!

உப்பு காரம் எல்லாம் இருக்கா ?
காரம் இல்லா இனிப்பான கேள்வி
ஆம்மாமா! சூப்பரா இருக்கு என்றேன்!
சரி , சாப்பிடும் போது பேசாதே என்றாள்!

இடையிடையே வெற்றுக் கரண்டிகள்
இடைவிடாமல் பரிமாறின.
வேறு ஏதாவது வேணுமா ?
இடைவிடாத கேள்விகளும் தொடர்ந்தன!

வெற்று வயிறு நிரம்பியது 
விடை பெறட்டுமா ? என்றேன்
இருப்பா, தண்ணீர் இங்கே இருக்கு என்றாள்
கரம் கழுவி எழுந்து நின்றேன்!

கரை படியா பாத்திரங்கள் 
கழுவி கவிழ்த்து வைத்தாள்
விளையாட்டு முடிந்ததா? என்றேன் 
சாப்பாடுதாம்ப்பா முடிந்து இருக்கு என்றாள்!

உணவை விளையாட்டு என்றெண்ணிய 
உணர்வில்லா என் பெரு மூளையை 
உணர்வுள்ள என் இதயம் சுட்டுவிட 
உற்று நோக்கினேன் என் மகளையும்
உறங்கிய வெற்றுப் பாத்திரங்களையும்!

வெற்றுப் பாத்திரங்கள் எல்லாம் 
பாசத்தின் அட்சய பாத்திரங்கள்
பரிமாறிய உணவுகள் எல்லாம் 
பாசத்தின் பசி போக்கிகள்!

மகளதிகாரம் எல்லாம் 
மரணம் தாண்டியும் 
மரணிக்காமல் நினைவில் 
மறவாமல் வர வேண்டும்!







வாழ்ந்து காட்டி விடு | Vaalnthu kaati vidu

Vaalu
Vaalnthu Kaatu

காதலை அறிமுகம் செய்தவளே 
வலியை சிறிது ஆற விடு 
நாளைய நாளுக்கு வழி விடு!

விழிகளுக்கு ஓய்வு கொடு 
கண்ணீருக்கு விடை கொடு 
முகத்தை பொலிவாக்கி விடு!

சிரிப்பை எல்லாம் அள்ளி விடு
அதில் இன்பத்தை சற்று சிதற விடு
சிதறியதை என்னோடு பகிர்ந்து விடு!

உன் கனவில் என்னை வர விடு 
கட்டியணைத்து ஆறுதல் சொல்ல விடு 
உன் கண்ணீரை என்னோடு பகிர்ந்த்து விடு!

வாழ்க்கை கதவை திறந்து விடு 
வெற்றி எனும் தென்றலை உலவ விடு
அமைதி வாழ்வை கரம் பிடித்து விடு!

விதி ரேகையை முற்றிலும்  மாற்றி விடு 
விடாது முயற்சிப்பவள் நிரூபித்து விடு
தோல்விகளை கைது செய்து விடு !

வழக்கம் போல சுழன்று விடு 
வாழ்க்கை சுழற்சி நகர விடு 
சரித்திரம் எட்டி பிடித்து விடு!

துன்பத்தை எல்லாம் மறந்து விடு 
பெண் சிங்கமாய் வேட்டை ஆடி விடு 
ஆண் சிங்கமாய் வீர நடை போட்டு விடு!






பாதத்தில் ஓர் இதயம் | Paathathil Oor Ithayam

Paatham
Kaalkalil Or Kaathal


அழகில் சில வகைகள் உண்டு 
தேக நிறத்தை சிலர் அழகென்பர் !
உள்ளத்தை சிலர் அழகென்பர் 
முக அமைப்பை சிலர் அழகென்பர்!

கருவிழிகள் ரசித்த எல்லாமே 
படைப்பு எல்லாமே சிலர் அழகென்பர்!
சிந்தனை கோளாறோ வசியக் கோளாறோ 
அவள் பாதங்கள் மட்டும் அழகென்றேன்!

காரணம் என்னவோ புரியாத கவிதை
கருங்கூந்தல் ரோஜா பூச்சூட மறந்து 
பாத விரல் சூட நினைவூட்டியது போல 
கனா சொன்ன காரணம் சற்றே ஏற்புடையது!

காற்றின் ஈரப்பதத்தை கவர்ந்திழுத்து 
அதை பாத விரல் நுனியில் கீரிடமிட்டு 
சிவந்த முகமாய் சிரிக்கிறது 
பாத விரல் நகங்கள் எனும் கண்ணாடிகள்!

நாணம் கொண்டு தலை கவிழும் நேரம் 
பாத விரல் நகம் கொண்டு 
உன் முகம் நீ பார்ப்பாய்!
பத்து விரல்கள் ஜொலிக்கும் கண்ணாடிகள்!

நேரத்தை வீணடிக்கும் கவிதைகள்
உனது பாதங்களில் பிறப்பதில்லை 
பாதத்தில் பிறந்து விட்ட கவிதைகள்
இதயத்தை வசியம் செய்ய மறப்பதில்லை!

தலையணை தலை சுமப்பதை விடுத்து
உன் பாத போதையை சுமக்கட்டும்!
ஆடை இல்லா பாத விரலில்
கவர்ச்சியும் இல்லை ஆபாசமும் இல்லை !

ஒரே இதயத்தை பாதம் தொட்டு 
பத்து விரலுக்கும் காணிக்கையாக்கி 
பாத அழகில் முழுவதும் மயங்கி 
உன் பாதத்தில் சரணடைந்தேன்!








தனிமை | Thanimai

Thani
Thanimai


தனிமைகள் பரிசளித்த
பலவித கவிதைகளுக்கு
தலைப்புக்கள் என்னமோ 
"தனிமை" என்றே பொருந்துகிறது!

எளிமையான கவிதை | Elimaiyaana Kavithai

Uthadu
IthalChilli


எளிமையாக கவிதை சொல்ல 
ஆழ்மனதையா தீண்ட வேண்டும்?
உன் இதழ் நோக்கினால் போதாதா ?

மே மாத வெயில் | May month Veyil

may
May month veyil


உதடுகள் திறக்காமல்
உச்சத்தில் இருந்து கொண்டு 
அஃறிணை பொருளின் 
நியாமான எச்சரிப்பு!

மானுட பிறப்புகளுக்கு
ஞாயிறு என்றால் விடுமுறை 
ஞாயிராகிய எனக்கு அல்ல!...


வாழ்த்துக்கு நன்றி | Vaalthukku nandri

inbox
Inbox Mail

வாழ்த்து மடல் அனுப்ப
விசைப்பலகைக்கு உத்தரவிட்டு
விரல் தொட்டு விழியால் நோக்கி
விரைந்து என் உள்பெட்டி அடைய செய்து 
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய 
உங்கள் நல் இதயத்திற்கு நன்றி!




இதழ் ஹைக்கூ | Ithal Haikoo

haikoo
Lips

ஹைக்கூ எழுதச் சொல்லி 
இருவரி இதழால் 
புன்னகை உதிர்க்கிறாய்!

விலைவாசி | Vilaivaasi


cut
Coconut

கூர் முனை அரிவாளால் 
இளநீர் சீவுவனை
நெருங்கவே பயம்!