இது கலியுகக் காதல்......


Kaliyukam
Kaliyuka kaathal
உண்மை அன்பைப் 
புரிந்து கொள்ளாதக் காதல்
சதைத் தின்னும் 
கழுகிடம் மாட்டி கொள்ளும்.
இது கலியுகக் காதல்.

காமத்துப் பாலில் 
இல்லாதக் காமங்கள் கூட
கலியுகக் காதல் 
கற்றுக் கொடுக்கும்.

நாணலைத் தேடும் 
காதலை விட 
அறைகளைத் தேடும் 
கலியுகக் காதல் அதிகம்.

கலியுகக் காதலின் 
உறைவிடம் இருள்.
ஏனோ தெரியவில்லை.
கலியுகக் காதலுக்கு 
வெளிச்சமே பிடிக்கவில்லை!

காதல் மயக்கம் மாறிப் போய்
காம மயக்கம் ஆனது.
இது கலியுகக் காதலின் அடையாளம்.

காதல் ஓர் உண்மையான அன்பு!
காதல் புனிதமானது!
உண்மை காதல் 
கண்களால் பேசும்! 
உணர்வுகளால் உறவாடும்!
நாணத்தால் விளையாடும்!

காதலைக் களங்கப்படுத்த வேண்டாம்!
கண்ட கண்ட இடங்களில் 
காமத்தை வெளிப்படுத்தி 
தெரு நாயாய் மாற வேண்டாம்!

தெய்வீகக் காதலின் 
தவறான இலக்கணம்
கலியுகக் (காமக்) காதல்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக