Enkal Chennai |
காற்றில் பறக்க விட்ட விதிகள்
பேருந்துப் புகையோடு பறந்த
பேருந்துப் புகையோடு பறந்த
சிகரெட் புகை
இது எங்கள் சென்னை.
அலுவலகத்தை நோக்கி
ஊதியத்தை எதிர்பார்த்து
பழுதடைந்த பேருந்தில்
எங்கள் பயணம்.
இது எங்கள் சென்னை.
சென்னைக்கே உரித்தான
கெட்ட வார்த்தை அது
இது வாய்மொழி இலக்கியமா?
இல்லை செவிவழி இலக்கியமா?
சந்தோசம் கோபம்
இந்த இரண்டின் முழக்கம் அது!
இது எங்கள் சென்னை.
மஞ்சள் பை அது
மாடிகள் பல கட்டும்
உழைப்புக்கு உயர்வு
இது எங்கள் சென்னை.
மகிழூந்து வைத்து
சுட்டெரிக்கும் வெயிலை
மேலும் சூடாக்குவோம்.
இது எங்கள் சென்னை!
பாதங்கள் இரண்டும்
சாலையில் பதியாமல்
இரு சக்கர வாகனத்தில்
நான் வீடு சென்றால்
பெரிய சாதனை.
வாகன நெரிசல்
எங்கள் சாலையின் தனித்துவம்.
இது எங்கள் சென்னை!
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்.
எங்கள் சென்னையின் அழகு
கூவம் ஆற்றில் தெரியும்.
இது எங்கள் சென்னை!
அழகான மெரினா மணல் அது
உருண்டாலும்
புரண்டாலும்
அழுக்கு ஒட்டாது.
காதல் பெயரைச் சொல்லி
அழுக்கு இதயங்கள்
அதன் மேல் அமர்ந்து இருக்கும்.
சுற்றுலா வந்த கிராமத்துப் பறவை
அதிசயமாய் பார்க்கும்.
இது எங்கள் சென்னை!
நிறைகள் சில
குறைகள் பல
இருந்தாலும் கூறிக் கொள்வோம்.
இது எங்கள் சிங்காரச் சென்னை!
சிங்காரச் சென்னை
உங்களை அன்புடன் வரவேற்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக