கோடை கால பறவை

கோடை கால பறவை


Paravai
Paravai kavithai

நீர் தேடி அலையும்
பறவையின் மனக் குமுறல் இதோ...

வீதி  உலா நானும் வருகிறேன்

வானின் வழியாக
தாகம் தணிக்க
நீர் தேடி அலைகிறேன்...
கானல் நீரைக் கண்டு
ஏமாற்றம் அடைகிறேன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
பசுமை தெரியவில்லை.
பண முதலைகளின்
நில அளவுக் கல்.
சாரை சாரையாய்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

பறி போன விளை நிலம் அது.
வில்லங்கச் சான்றிதழ் கேட்டு
வீதியில் போராடுகிறான்
விவசாயி ஒருவன்.
நேற்று வரை
என் தாகம் தணித்த
கடவுள் அவன்.

வீதி  உலா நானும் வருகிறேன்...

இதயத் துடிப்பு அதிகமாக
இளைப்பார இடம் தேடுகிறேன்.
புல்வெளி கூட இல்லாத இடத்தில்
மரங்களை நான் எங்கே தேடுவது ?

வீதி  உலா நானும் வருகிறேன்...

எனது சிறகுகள்
வலிக்க மட்டுமா செய்கிறது
கனக்கவும் செய்கிறது.
இருந்தாலும் தொடர்கிறேன்
தாகம் தணிக்கும் நீர் தேடி.

வீதி  உலா நானும் வருகிறேன்...

உடலில் உயிர் இருக்க வேண்டி
உங்கள் வீட்டு மாடி தேடி வருகிறேன்..
குவளையில் தண்ணீர் வைத்திடு தாயே!

எனது வீதி உலாவை
இனிதாய் நிறைவு செய் தாயே!!!.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக