இதயம் வலிக்கிறது...


Vali
Ithayam valikkirathu

எனது பேனாவில் 
மை மட்டும்தான்
சுரந்தது.
கவிதை எழுத 
என் கற்பனை அல்லவா
கசிந்தது.

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

எவர் முன்பும் 
நான் மண்டியிடவில்லை!
கற்பனையைத் தொழுகிறேன்.  
அருளை அவன் புரிகிறான் 
கவிதையாக!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!

களவாடப்பட்ட கவிதைக் கண்டு 
கண்ணீர் சுரந்தது
கண்களில் அல்ல!
இதயத்தில்.....

இரக்கம் கொண்ட இதயம் இது!!!

இதயம் வலிக்கிறது.
இணையத்தில் என் கவிதை 
திருடப்படும் பொழுது!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக