காதலர்களின் முதல் சந்திப்பு


தலை சாய்த்த 
நெற்கதிரைப் போல்
நாணம் கொண்ட முகம்.

அழகின் எல்லை அது 
அளவோடு சிவந்து சிரித்த 
நாணம் கொண்ட உதடுகள்

புள்ளி வைக்காத கோலம்
அழகாக போட்ட 
நாணம் கொண்ட கால்கள்.

விரல்களுக்கு இடையே 
பரிமாறப்பட்ட கவிதை சொடுக்குகளின் 
நாணம் கொண்ட விரல்கள்.

நேருக்கு நேர் 
முகம் பார்க்க 
நாணம் கொண்ட கண்கள்.

மஞ்சள் தேகத்திற்கு 
சிகப்பு சாயம் 
நாணம் கொண்ட கன்னங்கள்.

அழகு அழகு 
பெண்மைக்கு நாணம் அழகு 
என்னவளுக்கு 
அது இயல்பான அழகு!

No comments:

Post a Comment